மூணாறு கோயில்களில் திருவிழா
மூணாறு : மூணாறில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தொழிலாளர்கள் கோயில்களில் திருவிழாக்களை நடத்தி வழிபட்டனர். மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களை துவக்க காலத்தில் ஆங்கிலேயர்கள் நிர்வாகித்து வந்தனர். அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வசதியாக, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தனர். அதனை பயன்படுத்தி தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் திருவிழாக்களை நடத்துவர். இந்த வழக்கம் நுாற்றாண்டுக்கும் மேல் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விடுமுறையொட்டி மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனில்உள்ள கன்னியம்மன் கோயிலில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், முளைப்பாரி, பறவைகாவடி ஆகியவற்றை எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.