சிவகாசியில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை
சிவகாசி: சிவகாசியில் ஐயப்பன்
கோயில், செல்வவிநாயகர் கோயில் உட்பட பல்வேறு கோயி ல்களில் மண்டல பூஜை
நடந்தது. இதையொட்டி ஐயப்பனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி
உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,
சந்தனகாப்பு அலங்காரத்துடன், 18-ம்படி பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டு தரிசனம் செய்தனர். மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. செல்வவிநாய கர் கோயிலில் நடந்தஅன்னதானத்தை அமைச்சர் கே.டி.ரா ஜேந்திரபாலாஜி தொடங்கி வைத் தார்.நகர செயலாளர் அசன்பதூரூதீன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் திருமுருகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் சீனிவாசன் பங்கேற்றனர்.
காரியாபட்டி: காரியாபட்டி பஜாரில் உள்ள சொர்ணஐயப்பன் கோயிலில் நடந்த மண்டல பூஜை யை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப் பட்டது. பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து இப்பூஜையில் கலந்து கொண்டனர்.
வழிபாட்டு பாடல்கள் பாடப்பட்டது. அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.