அமெரிக்காவில் கோவிலாக மாறும் தேவாலயங்கள்...
ADDED :2953 days ago
ஆமதாபாத் : அமெரிக்காவின் டீலாவேர் பகுதியில் உள்ள 50 ஆண்டு கால பழமை வாய்ந்த தேவாலயம், சுவாமிநாராயண் காதி சன்ஸ்தான் கமிட்டியினரால், சுவாமிநாராயண் ஹிந்து கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியினரால், ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் கென்டுகி நகரங் களில் உள்ள தேவாலயங்களும் மற்றும் பிரிட்டனின் போல்டன் மற்றும் மான்சென்ஸ்டர் நகரங்களில் உள்ள தேவாலயங்களும் கோவிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.