உளுந்தூர்பேட்டை எறையூரில் கிறிஸ்துமஸ் பண்டிகை மூன்று ஆண்டுக்கு பின் தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை : எறையூர் புனித ஜெபமாலை அன்னைஆலயத்தில், 3 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா, எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில், யேசு கிறி ஸ்து பிறப்பையொட்டி சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. ஆலய பங்கு தந்தை ஆல்பர்ட் தலைமையில், உதவி பங்கு தந்தை அலெக்சாண்டர், ஜான்பால் முன்னிலையில் சிறப்பு பிராத்தனை நடந்தது. தலைமை காரியஸ்தர் சார்லஸ்ஜான்போஸ்கோ, காரியஸ்தர்கள் லூக்காஸ், மார்ட்டீன், ஆரோக்கியதாஸ், செல்வராஜ், சஞ்சோன், ஞானபிரகாசம், ஆரோக்கியதாஸ், மேத்தேயூ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 25.12.17. மாலை 6:30 மணிக்கு ஆலய வளாகத்தில் இருந்து திருத்தேர் குடும்ப தேரோட்டம் புறப்பட்டது. இரவு 9.40 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர். அதே போல் இருந்தை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு தந்தை அருள்தாஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.