தர்மபுரியில் வைகுண்ட ஏகாதசிக்காக ஒரு லட்சம் லட்டு தயாரிப்பு
ADDED :2887 days ago
தர்மபுரி: தர்மபுரி பரவாசுதேவ சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியில், பக்தர்களுக்கு வழங்குவதற்காக, ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தர்மபுரி கோட்டை வரலட்சுமி உடனுறை பரவாசுதேவ சுவாமி கோவிலில், கடந்த, 26 ஆண்டுக ளாக, வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களுக்கு, இலவசமாக லட்டு வழங்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, ஒரு லட்சம் லட்டுகளை தயாரித்து வழங்கி வருகின்றனர். இந்தாண்டும், வரும், 29ல், வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்களுக்கு, ஒரு லட்சம் லட்டுகளை பிரசாதமாக வழங்க உள்ளனர். இதற்காக, கோவில் வளாகத்தில், கடந்த, 23 முதல் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.