குமாரபாளையம் ஐயப்பன் கோவில் 23ம் ஆண்டு பிரம்மோத்சவம், மண்டல பூஜை
குமாரபாளையம்: குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், பிரம்மோத்சவ விழா, மண்டல பூஜை நடந்தது. குமாரபாளையம், அம்மன் நகர், ஐயப்பன் கோவில், 23ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா மற்றும் மண்டல பூஜை, டிச., 15ல் துவங்கியது. கடந்த, 24ல், ஐயப்ப சுவாமிக்கு அஷ்ட திரவிய மகா அபிஷேகம், நேற்றுமுன்தினம், மண்டல பூஜை, சிறப்பு பஜனை, புஷ்பாஞ்சலி மற்றும் அன்னதானம் நடந்தது. இதை முன்னிட்டு, வளாகம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குத்து விளக்குகள், அகல் விளக்குகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கணபதி, முருகன், ஐயப்பன் மற்றும் இதர சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களால் சிறப்பு பக்தி பஜனை நடத்தப்பட்டது. விழாவில் மக்கள், பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.