சென்னிமலை ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் டிச. 28ல் பொங்கல்
ADDED :2810 days ago
சென்னிமலை: சென்னிமலை - பெருந்துறை பிரதான சாலையில், ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கொங்கு வேளாள கவுண்டர்களின் ஒரு கூட்டமான ஈஞ்சன் குலத்தார், குலதெய்வமாக வழிபடுகின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க, இக்கோவில் பொங்கல் விழா, கடந்த, 10ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது; 12ல் காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடந்தது. குதிரை துலுக்கு கேட்டல் மற்றும் அம்மை அழைத்தல், நேற்று நடந்தது. இன்று மதியம் தீர்த்த ஊர்வலம், அபி?ஷகம் நடக்கிறது. நாளை மாவிளக்கு மற்றும் பொங்கல் வைபவம் நடக்கிறது. ஈங்கூர் மட்டுமின்றி, கோவிலுக்கு பாத்தியப்பட்ட அவினாசி, திருப்பூர், கோவை, கோபி, பொள்ளாச்சி, சேலம், பழநி பகுதிகளை சேர்ந்தவர்களும், ஆயிரக்கணக்கில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபடுவர். அன்னதானம் வழங்கப்படுகிறது. டிச.,29ல் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.