கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா துவக்கம்
ADDED :2810 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. நடராஜர் ரக்சா பந்தனம் மற்றும் மாணிக்க வாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் ஆருத்ரா தரிசன விழா டிச. 25 இரவு துவங்கியது. மாணிக்கவாசருக்கு அபிஷேகம் செய்து, புறப்பாடும், நடராஜருக்கு திருவெம்பாவை பாடி, மஹா தீபாராதனையும் நடந்தன. வரும் ஜன., 1ல், காலை, 10:15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு அம்மன் அமராவதி ஆற்றுக்கு தீர்த்தவாரி செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன., 2 அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகம், 10:30 மணிக்கு சுவாமி தரிசனம் நடக்கிறது.