/
கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி டிச. 28ல் மோகினி அவதாரம்
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி டிச. 28ல் மோகினி அவதாரம்
ADDED :2810 days ago
பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி டிச 28ல் மாலை பெருமாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலிக்கவுள்ளார்.தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அதிகாலையில் பக்தர்கள் எழுந்து பெருமாள் கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடல்கள் பாடுவது வழக்கம்.இதன் படி முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசியையொட்டி பகல்பத்து உற்ஸவம் நடந்து வருகிறது.வியாழக்கிழமை 9ம் நாள் விழாவில் மாலை 5:00 மணிக்கு பெருமாள் மோகினியாக அலங்கா ரமாகி ஆடி வீதிகளில் வலம் வரவுள்ளார். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு நடை சாற்றப்படும். பின்னர் டிச. 29ல் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல்வழியாக பெருமாள் வரவுள்ளார்.