உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 60 ஆண்டுகளுக்கு பின்.. தைப்பூச நாளில் சந்திர கிரகணம்: பழநி கோவில் நடை அடைப்பு

60 ஆண்டுகளுக்கு பின்.. தைப்பூச நாளில் சந்திர கிரகணம்: பழநி கோவில் நடை அடைப்பு

பழநி: கிட்டத்தட்ட, 60 ஆண்டுகளுக்கு பின், தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால், பழநி கோவில் நடை, மாலையில் அடைக்கப்படுவதால், தேரோட்டம் காலையில் நடக்கிறது. பழநி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா, 2018ம் ஆண்டு ஜன., 25ல் துவங்கி, பிப்., 3 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, ஜன., 30ல், திருக்கல்யாணமும், ஜன., 31ல் தைப்பூசத்தன்று தேரோட்டமும் நடக்கிறது. இந்தாண்டு தைப்பூசம் பவுர்ணமி அன்று, சந்திர கிரகணம் மாலை, 6:22 முதல் இரவு, 8:41 வரை நிகழ்கிறது. இதனால், தேரோட்டம் பகல், 11:00 மணிக்கு நடக்கிறது. கோவிலில், மாலை, 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம், 2:45 மணிக்கு துவங்கி, 3:45 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. ஏறத்தாழ, 60 ஆண்டுகளுக்கு முன், தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வந்து, பகலில் தைப்பூச தேரோட்டம் நடந்ததாக, கோவில் அதிகாரிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !