உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி பெருவிழா: 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி விறுவிறு

வைகுண்ட ஏகாதசி பெருவிழா: 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி விறுவிறு

சேலம்: பெருமாள் கோவிலில், 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில், ஆண்டாள் திருப்பாவை நண்பர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, சேலம், பட்டைக்கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது. அன்று வரும் பக்தர்களுக்கு லட்டுகள் வழங்கப்படும். அதற்காக, ஆண்டாள் திருப்பாவை நண்பர் குழுவினர், 400 கிலோ சர்க்கரை, 200 கிலோ கடலை மாவு, 250 லிட்டர் எண்ணெய், 30 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 30 கிலோ உலர் திராட்சை, 4 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணியில், நேற்று ஈடுபட்டனர். அவர்களுடன், சமையல் கலைஞர்கள், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், இப்பணியில் ஈடுபட்டனர். குழுவினர் சார்பில், லட்டு மட்டுமின்றி, பல்வேறு வண்ண மலர் தோரணங்கள் அலங்காரம் செய்யப்படவுள்ளது. அதற்காக, மலர் மாலைகள் தொடுக்கும் பணியில், ஏராளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், லட்டு தயாரிக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !