திருப்பூர் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :2887 days ago
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 58ம் ஆண்டு மண்டல பூஜை விழாவில், சுவாமி ஆறாட்டு உற்சவம், ஊர்வலம், லட்சார்ச்சனை, கூட்டு வழிபாடு, குத்து விளக்கு பூஜை, அகண்டநாம பஜனை மற்றும் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.நேற்று, மண்டல பூஜை நிறைவு நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை, களபாபிஷேகம்; மாலையில் அபிஷேகம், புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.