லாஸ்பேட்டையில் நாம சங்கீர்த்தனம்
ADDED :2841 days ago
புதுச்சேரி : வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி, நாளை 29ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை திரவுபதியம்மன், பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை 29ம் தேதி, இரவு 7.௦௦ மணிக்கு துவங்கி, இரவு 10.௦௦ மணி வரை, கோவிந்தபுரம் ஞானேஷ்வர் ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர் நாமசங்கீர்த்தனம் நிகழ்த்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பாண்டுரங்க பஜன் சமாஜ் நிர்வாகிகள் செய்துள்ளனர். முன்னதாக, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நாளை காலை ௪:௩௦ மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதைதொடர்ந்து, ௭ மணியளவில், கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.