கடத்தூர் சிவன் கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை
ADDED :2840 days ago
உடுமலை : பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு, விசேஷ நாட்களில், சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில், கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. உடுமலை அருகே கடத்துாரில் பழமை வாய்ந்த அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. அமராவதி ஆற்றங்கரையில், அமைந்துள்ள இக்கோவிலுக்கு பிரதோஷம் உட்பட விசேஷ நாட்களில், பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். உடுமலையிலிருந்து கடத்துார் கிராமம் வரை பஸ் இயக்கப்படுகிறது. அங்கிருந்து ஒரு கி.மீ., தள்ளி அமைந்துள்ள கோவிலுக்கு, பக்தர்கள் நடந்தே செல்கின்றனர். எனவே, விசேஷ நாட்களில், கோவிலுக்கு, காலை மற்றும் மதிய பூஜைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அசோகனிடம், பக்தர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.