உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகினி கோலத்தில் சுந்தரராஜப் பெருமாள்

மோகினி கோலத்தில் சுந்தரராஜப் பெருமாள்

பரமக்குடி, பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்வசத்தின் பத்தாவது நாளான நேற்று பெருமாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார். பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயில் பகல்பத்து உற்சவத்தில் பத்தாவது நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு பெருமாள் மோகினியாக ரதவீதியை வலம் வந்தார். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு நடை சாற்றப்பட்டது. இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக வரவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !