செந்துறை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :2838 days ago
செந்துறை: நத்தம் அருகே செந்துறை ஐயப்பன் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மண்டல பூஜை நடந்தது.
இதில் கணபதி ஹோமம், கலச பூஜை, அஷ்டாபிஷேகம் நடந்தது. மங்கள வாத்தியம் முழங்க படி பூஜை, நெய், பால், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன.
மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்ட ப்பட்டது. இரவு அலங்கார மின்ரத பவனியை அடுத்து அன்னதானம் நடந்தது.