உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகதுருகம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தியாகதுருகம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தியாதுகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா
நடந்தது.

தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. அதிகாலை 3:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதைத்தொடர்ந்து உற்சவர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியே எழுந்தருளினார். தொடர்ந்து மூலவருக்கு மகாதீபாராதனை மற்றும் சுவாமி திருவீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !