உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

விழுப்புரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில், நடந்த சொர்க்கவாசல்
திறப்பு விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் ஜனகவல்லி நாயிகா சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியான அதிகாலை பரம பத வாசல் திறப்பு விழா நடந்தது. இதில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பரம பத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மூலவர் தரிசனம் முடிந்து, பக்தர்கள் அனைவருக்கும், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !