சபரிமலைக்கு 36 ஆண்டுகளாக மாலை அணிந்து செல்லும் கிருஸ்தவர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் டிச.31 - தஞ்சை மாவட்டம் புனல்வாசல் கிராமத்தில், 36 ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கிருஸ்தவர் ஒருவர் சென்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேஸ்ராஜ்,65, விவசாயி. இவரது மனைவி அருள்மேரி, இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஜேஸ்ராஜ், கடந்த 1980ம் ஆண்டு முதல் சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து இந்த ஆண்டுடன் 36 வருடங்களாக சென்று வருகிறார்.
இது குறித்து ஜேஸ்ராஜ் கூறியதாவது: கடந்த 1977 ம் வருடம் எனக்கு மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெரிதும் வருந்தினேன். இந்நிலையில், சபரிமலை ஐய்யப்பனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து வருடந்தோறும் சென்று வந்த எனது நண்பர்கள் உப்புவிடுதி செல்வராசு என்பவர், அறிவுரையினை ஏற்று கடந்த 36 ஆண்டுகளாக முறைப்படி விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐய்யப்பனை தரிசனம் செய்து வருகிறேன். இதனால். எனது உடல் நன்றாக உள்ளதாக இவ்வாறு தெரிவித்தார். மதத்தின் பெயரில் சண்டையிட்டு கொள்ளும் மனிதர்கள் மத்தியில் ஜேஸ்ராஜ் போற்றபடி வேண்டிய பக்தர் என அனைவரும் கூறுகின்றனர்.