திருப்பரங்குன்றத்தில் ராட்டின திருவிழா
ADDED :3021 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை ராட்டின திருவிழா இன்று(ஜன., 1) நடக்கிறது. இத்திருவிழா மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டுடன் டிச., 24ல் துவங்கியது. தினமும் காலையில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் வீதி உலாவும், இரவு கோயில் திருவாட்சி மண்டபத்தை பல்லக்கில் மூன்றுமுறை வலமும் வந்து எழுந்தருளினார். ஓதுவாரால் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன. இந்நிகழ்ச்சி நேற்றுடன் முடிந்தது. இன்று காலையில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலமும், இரவு கோயிலுக்குள் கண்ணுாஞ்சலும் முடிந்து, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, கோயில் முன் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ராட்டினத்தில் எழுந்தருள்வர்.