சஞ்சீவிராய ஆஞ்சநேயர் கோவிலில் 14ம் தேதி லட்சதீப விழா
ADDED :15 hours ago
திருக்கனுார்: கைக்கிலப்பட்டு சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில், லட்சதீப விழா, திருக்கல்யாண உற்சவம் வரும் 14ம் தேதி நடக்கிறது. திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டு கிராமத்தில் விஸ்வரூப சஞ்சீவிராய ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 35ம் ஆண்டு மகோற்சவ லட்சதீப விழா வரும் 14ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு ஹோமம் லச்சார்ச்சனை, காலை 10:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக மாலை 4:30 மணிக்கு சீதை, ராமர் திருக்கல்யாண உற்சவம், மாலை 6:00 மணிக்கு குளக்கரை சுற்றிலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.