உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி வருண ஜெபம்: கொங்குகாசியில் சிறப்பு வழிபாடு

மழை வேண்டி வருண ஜெபம்: கொங்குகாசியில் சிறப்பு வழிபாடு

கோவை: ஆலாந்துறையை அடுத்த நாதே கவுண்டன் புதுாரில் அமைந்துள்ள கொங்குகாசி அஷ்ட பைரவர் கோயிலில் நேற்று மழை வேண்டி தண்ணீரில் மூழ்கி சிவனடியார்கள் வருணஜெபம் மேற்கொண்டனர். அஷ்ட பைரவர் கோயில் வளாகத்தில் தண்ணீரால் தடாகம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதைச்சுற்றி மரங்கள் இருப்பது போன்ற அமைப்பை ஏற்படுத்தி, தர்மராஜாதிரவுபதிபீடம் கிருஷ்ணமூர்த்தி அடிகளார் உள்ளிட்ட எட்டு சிவனடியார்கள் கழுத்து வரை தண்ணீரில் மூழ்கிய நிலையில் வருணஜெபம் மேற்கொண்டனர். கோவையில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது. உஷ்ணத்தை குறைக்க மழை பொழிய வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். நோய் நொடியின்றி மக்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இரவு 7:00 மணிக்கு அஷ்டமி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் குடும்பம் சகிதமாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !