மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திரன் ஆராதனை விழா வருகிற 25ம் தேதி துவக்கம்
ADDED :13 minutes ago
மானாமதுரை: மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் 46 வது ஆண்டு ஆராதனை விழா வருகிற 25,26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் கர்நாடக இசைகலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆராதனை விழா நடைபெறும். இவ்விழாவில் ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா ஏப்.25,26 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. விழாவில் உஞ்சவ்விருத்தி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர, வடுக, கன்யா சுவாசினி, தம்பதி பூஜைகள், இசை நிகழ்ச்சி, சொற்பொழிவுகள், பாராட்டு விழாக்கள் நடைபெற உள்ளது. சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை குழுவினர் செய்து வருகின்றனர்.