சின்மய கைவல்யாவில் 1,008 திருவிளக்கு பூஜை
ADDED :2848 days ago
சேலம்: சேலம், ரெட்டியூர், புது ஏரிக்கரை ரோடு, ஆர்.டி. நகரில் உள்ள, சின்மய கைவல்யாவில், இன்று மாலை, 5:30 முதல், இரவு, 8:00 மணி வரை, விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனையுடன், 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில் பங்கேற்க, பதிவு செய்த ரசீதை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஆண்கள் வேட்டி, பெண்கள் சேலை அணிந்து மட்டும் வர வேண்டும். பூஜைக்கு தேவையான விளக்கு, நெய், பூக்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்படும். இதையொட்டி, அழகாபுரம், தெய்வீகம் மண்டபத்திலிருந்து, சின்மய கைவல்யாவுக்கு, இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, 0427 - 6451449, 2330319 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.