உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் சக்தி விரதம் துவக்கம்

திருக்கழுக்குன்றத்தில் சக்தி விரதம் துவக்கம்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில், மேல்மருவத்துார் பக்தர்கள் தைப்பூச சக்தி மாலை அணிந்து விரதம் துவக்கினர். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்துாரில் புகழ்பெற்ற ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு திருக்கழுக்குன்றம் பக்தர்கள் ஆண்டுதோறும் ஒன்பது நாட்கள் சக்தி மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். அந்த வகையில், விரதம் மேற்கொள்ளுதல் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதற்காக, காலை, 7:00 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜையுடன் தொடங்கி, பக்தர்கள் சக்தி மாலை அணிந்து, விரதத்தை துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !