பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலைய கண்காட்சி
ADDED :2849 days ago
விழுப்புரம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வளவனுார் மேற்கு அக்ரஹார பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் ஆன்மிக படவிளக்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. வளவனுார் அருகே குமாரகுப்பத்தில் அமைந்துள்ள கலியவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், நாளைய பாரதம் எப்படி சொர்க்கமாக மாறுகிறது என்றும், மீண்டும் லட்சுமி நாராயணன் ஆட்சி மலர்வதை பற்றி படவிளக்கம் மூலம் காண்பிக்கபட்டது. பிரம்மகுமாரிகள் தியான நிலையத்தில் தினந்தோறும், காலை மற்றும் இரவு நேரங்களில் ராஜயோக தியான பயிற்சி இலவசமாக கற்றுத்தரப்படுகிறது என நிர்வாகி செல்வமுத்துக்குமாரன் தெரிவித்தார்.