சிவபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடு மும்முரம்
ADDED :2848 days ago
கிருஷ்ணராயபுரம்: சிவாயம் சிவபுரீஸ்வரர் சிவன் கோவிலில், ஜன., 2ல், ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. கிருஷ்ணராயபுரம் சிவாயம் அருகே, பிரசித்தி பெற்ற சிவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இன்று இரவு மாணிக்கவாசகர் புறப்பாடு அதனை தொடர்ந்து சந்திரசேகர சுவாமி நூற்றுக்கால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின், பிச்சாடன மூர்த்தி நந்தவனம் அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 6:00 மணிக்கு, மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, மாலை, 4:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, உதவி ஆணையர் சூரியபிரகாஷ், கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.