உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

புத்தாண்டில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

கிருஷ்ணராயபுரம்: புத்தாண்டை முன்னிட்டு, லாலாப்பேட்டை மாரியம்மன் கோவிலில், புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மக்கள் வழிபட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கடைவீதியில், மாரியம்மன் கோவில் உள்ளது. புத்தாண்டு முன்னிட்டு நேற்று, அம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. 2,000 ரூபாய், 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு, சிறப்பான முறையில் அலங்காரம் செய்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !