உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளையஞ் சாலைக்குமரன் கோயிலில் மார்கழி மாத பிறப்பு சிறப்பு பூஜை

பாளையஞ் சாலைக்குமரன் கோயிலில் மார்கழி மாத பிறப்பு சிறப்பு பூஜை

திருநெல்வேலி : நெல்லை பாளையஞ் சாலைக்குமார சுவாமி கோயிலில் 32வது ஆண்டு மார்கழி மாத பிறப்பு சிறப்புக் கட்டளை பூஜையை முன்னிட்டு சிறப்பு நாதஸ்வரம், தேவார இன்னிசை கச்சேரி நடந்தது. கம்பர் குல உவச்சர் சமுதாயம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கம்பர் சமுதாய மாநில தலைவர் ரவீந்திரன், இளைஞரணி தலைவர் பாலன் முன்னிலை வகித்தனர். கணபதி ஹோமம், சாலைக்குமரன், அம்பாள், சண்முகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மாலையில் சண்முகர் அர்ச்சனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. நெல்லை சீனிவாசன், சங்கரநாராயணன் சிறப்பு நாதஸ்வரம், ஆறுமுகம், ராம்குமார் தவில் கலைஞர்களின் சிறப்பு தவில் இசையும் நடந்தது. மதியழகன் குழுவினரின் தேவார இன்னிசையும், இரவு சுசீந்தரம் ஹரிஹரன், ராமகிருஷ்ணன் (எ) சுரேஷ் குழுவினரின் சிறப்பு நாதஸ்வரம், ஆர்.எஸ்.சுப்பையா, நெல்லை ஆறுமுகம் குழுவினரின் சிறப்பு தவில் இசையும் நடந்தது.விழாவில் கைலாசம், செல்லப்பா கம்பர், ஆறுமுகம் கம்பர், சுப்பிரமணியன், ரஜினிமுருகன், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !