உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணி கோவிலில் சத்ருசம்ஹார பூஜை

பாலசுப்ரமணி கோவிலில் சத்ருசம்ஹார பூஜை

மல்லசமுத்திரம்: வையப்பமலை, பாலசுப்ரமணியம் கோவிலில், சத்ருசம்ஹார பூஜை நடந்தது. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை, பாலசுப்ரமணியம் கோவிலில் நேற்று, சத்ருசம்ஹார சிறப்பு பூஜைகள் நடந்தது. அர்ச்சனை, சம்ஹார பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. வையப்பமலை, மரப்பரை, செக்காரபட்டி, மின்னாம்பள்ளி, மொரங்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வெள்ளிக் கவசத்தில் முருகன் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !