கன்னிகா பரமேஸ்வரி பள்ளியில் ராதாகிருஷ்ண திருக்கல்யாணம்
ADDED :2927 days ago
திண்டிவனம்: திண்டிவனத்திலுள்ள கன்னிகாபரமேஸ்வரி பெண்கள் உயர்நிலை பள்ளியில், ராதாகிருஷ்ண திருக்கல்யாணம் நடந்தது. பள்ளி வளாகத்தில் நேற்று காலை, நுாறாவது ராதாகிருஷ்ண திருக்கல்யாணம் நடந்தது. பெண்களுக்கு கல்வி வளம் பெருகுவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும், திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் சஞ்சீவி குப்தா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சுதர்சனன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைவர் நரசிம்மன், உறுப்பினர்கள் ராஜப்பா, பார்த்தசாரதி மற்றும் நாகராஜ்குப்தா உட்பட பலர் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை, கணேச அய்யர் வேத முறைப்படி நடத்தி வைத்தார். நிகழ்ச்சியையொட்டி, பள்ளியை சேர்ந்த மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.