ஆன்மிக பணியில் பஜனைக்குழு
பெரியகுளம்: 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கு வேன் என சுவாமி விவேகானந்தர் கூறினார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் பல இளைஞர்கள் நல்சிந்த னையில் பல்வேறு துறை களில் பணியாற்றி கோலோச்சுகின்றனர். இவை ஆன்மிகத்திற்கும், அறிவிற்கும் கூட்டாக கிடைத்த வெற்றியாகும். இதன் வரிசையில்பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயிலில்,மார்கழி 1 முதல் தை 1 வரை, ஆண்டாள் பாடிய திருப்பாவையை பாடிகிருஷ்ணரை தோளில் சுமந்தபடி வீதி உலா வருகின்றனர். இந்த பஜனைக்குழுவில்கல்லுாரி மாணவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வ லர்கள் 25 பேர் இடம்பெற் றுள்ளனர். அதிகாலை 4:30 மணிக்கு கோயில் வளாகத்தில் ஒன்றினை யும் குழுவினர், அங்கு துாய்மைப்படுத்துகின்றனர். கிருஷ்ணரை அலங்கரித்து பல்லக்கில் ஏந்தியபடி தாமரைக்குளம் பகுதிக்கு செல்கின்றனர். ஒவ்வொரு தெருவிற்கும் செல்லும் பஜனைக்குழு வினை, மக்கள் வாசலில் கோலமிட்டு வரவேற்று கிருஷ்ணரைவழிபடுகின்றனர்.
பஜனைக்குழுவைச் சேர்ந்த அஜித்பாண்டி கூறு கையில்: 10 ஆண்டாக இது நடக் கிறது. ஆரம்பத்தில் மூன்று பேருடன் ஆரம்பித்த பஜ னைக்குழு தற்போது 25 பேராக உயர்ந் துள்ளது. 30 நாட்களும் கிருஷ் ணரை சுமந்து செல்லும் போது, மனது காற்றில் மிதக்கும் பக்தி மயமாகிறது. அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து குளிர்ந்த தண்ணீரை உடலில் ஊற் றும்போது பனியின் காரணமாக லேசான நடுக்கம் வரும். அதன் பிறகு உடம்பும், தண் ணீரும் ஒன்றாக பயணிக்கும். அந்த நாள்முழுவதும் சுறுசுறுப்புத்தான்.வீதி உலா செல்லும் போது,அப்பகுதியைச் சேர்ந்த செல்வி, முருகேஸ்வரி, சித்ரா உட்பட 10 பேர், 4 ஆண்டாககிருஷ்ணருக்கு மாலை, பூக்கள் கொடுத்து உதவுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் மற்றும்சிறுவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது. இது எங்கள் ஆன்மிக பஜனைக்கு கிடைத்த வெற்றி. ஒரு மாதம் நாங்கள் செய்யும் பஜனைக்கு, ஆண்டு முழுவதும் மனதில் நம் பிக்கை ஊற்றெடுக்கிறது. அனைத்து வேலைகளிலும் மனமும், சிந்தனையும் ஒன்றாக பயணித்து, நினைத்த இலக்கை அடை கிறோம். எப்போது மார்கழி 1வரும் என மனம் ஏங்கும், என் றார். இவர்களுக்கு வாழ்த் துக்கூற 90036 71949