27 வது ஆண்டாக பழநிக்கு பாதயாத்திரை
ADDED :2924 days ago
கூடலுார்:கூடலுாரில் இருந்து 27 வது ஆண்டாக பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். கூடலுாரில் உள்ள சுருளிமலை பழநிமலை பாதயாத்திரை குழுவில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். இக்குழுவினர் 27 வது ஆண்டாக பழநிக்கு பாதயாத்திரையை நேற்று கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் இருந்து துவக்கினர். சின்னமனுார், வீரபாண்டி, லட்சுமிபுரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு, செம்பட்டி, தருமத்துப்பட்டி, மூலச்சத்திரம், விருப்பாச்சி, சத்திரப்பட்டி வழியாக பழநிக்கு ஜன. 11 ல் சென்றடைகின்றனர். அன்று தரிசனம் முடித்து ஊர்திரும்புகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆடவர் அணி குருசாமி டி.வி.எம்.முருகேசன், மகளிர் அணி குருசாமி இந்துபானு செய்துள்ளனர்.