கைலாசநாதர் கோவிலில் ஏப்., 22ல் கும்பாபிஷேகம்
ADDED :2867 days ago
தாரமங்கலம்: கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், ஏப்., 22ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் கும்பாபி?ஷகம், 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தற்போது, மீண்டும் நடத்த, சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா தலைமையில், விழா குழு அமைத்து, சீரமைப்பு பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேக நாள் தேர்வு செய்வதற்கான கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், ஏப்., 22ல், விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. செயல் அலுவலர் கலைச்செல்வி, கட்டளைதாரர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.