மகா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :2966 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த, வீட்டுகட்டி மகா கணபதி கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. நேற்று மாலை, பால், தயிர், இளநீர் கொண்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு, மலர், அருகம்புல் கொண்டு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இதில், லாலாப்பேட்டை, வீட்டுகட்டி, சிந்தலவாடி பகுதிகளிலிருந்து, பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கடஹரசதுர்த்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
* இதேபோல், சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில் பின்புறம் உள்ள யோக வலம்புரி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. யோக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது.