வெள்ளாத்துாரில் அம்மனுக்கு சந்தனக்காப்பு
ADDED :2915 days ago
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துாரம்மன் கோவில். இங்கு, ஆடி, தை மாதங்களில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். நித்ய பூஜைகளுடன், கடந்த கார்த்திகை மாதம் முதல், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் துவங்கி, நடந்து வருகிறது. ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, சிறப்பு தரிசனம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் வெள்ளாத்துாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை, திருத்தணி, ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வரும் தை முதல் நாள் துவங்கி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளதால், கோவில் நிர்வாகத்தினர் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.