கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்
ADDED :2865 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெரு மாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நேற்று மாலை நடந்தது. திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம் நடந்தது. பெருமாள், சீதேவி, பூதேவி, ஆழ்வார்கள் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடத்தினர். பெருமாள், தாயார் உள் பிரகாரம் வலம் வந்தபின், மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். சேவை, சாற்றுமுறை, வேதபாராயணம் நடந்தது. அதனை தொடர்ந்து பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் உற்சவம் நடத்தினர். அலங்கார தீபங்கள் வழிபாடு செய்தனர். பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேசிக பட்டர் பூஜைகளை செய்திருந்தார்.