சேஷாத்ரி சுவாமிகள் 3ம் நாள் ஆராதனை
ADDED :2865 days ago
கொடுமுடி: சேஷாத்ரி சுவாமிகளின், மூன்றாவது நாள், ஆராதனை விழா நேற்று நடந்தது. ஊஞ்சலூர் காவிரி ஆற்றங்கரை அருகில், சேஷாத்ரி சுவாமிகள் சமாதி உள்ளது. இங்கு, 89வது ஆண்டு ஆராதனை விழா நடந்து வருகிறது. இதையொட்டி தனுர்மாஸ பூஜை, வேதபாராயணம், லட்சார்ச்சனை உள்ளிட்டவை நடந்தன. விழா, மூன்றாம் நாளான நேற்று, மஹனீயர்கள் உபதேசம், வாவரண பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. வரும், 10ல் காலை, 10:00 மணிக்கு சேஷாத்ரி சுவாமிகளின் ஆராதனை, இரவு, 8:00 மணிக்கு ஊர்வலமும் நடக்கிறது.