கண்டாச்சிபுரத்தில் திருவாசக முற்றோதல்
ADDED :2865 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் 109 மாத திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கண்டாச்சிபுரம் திருவாசக முற்றோதல் குழுவினர் சார்பாக, மாதந்தோறும் திருவாசக முற்றோதல் நடந்து வருகின்றது. இதேபோல், நேற்று நடைபெற்ற 109வது முற்றோதல் நிகழ்ச்சிக்கு, ஓதுவார் பழனியாண்டி தலைமை தாங்கினார். ஓதுவார்கள் சந்நியாசி, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 8 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரை திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இதில் ஆறுமுகம், கணேசன், கல்யாணசுந்தரம் உட்பட ஓதுவாரகள் பலர் கலந்துகொண்டு தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடினர்.பின்னர் இறைவழிபாடு நடந்தது.