திருவெம்பாவை திருவீதி உலா
ADDED :2911 days ago
செந்தாரப்பட்டி: தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி திருதழைபுரீஸ்வரர் சிவனடியார் திருக்கூடம் அமைப்பு சார்பில், திருவெம்பாவை பெருவிழா நேற்று நடந்தது. அதையொட்டி, செந்தாரப்பட்டியில், சிவனடியார்களின் ஆன்மிக ஊர்வலம் நடந்தது. அதில், அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகர் சிலையுடன், திருக்கூடம் அமைப்பாளர்கள், சிவனடியார்கள் மேள தாளங்களுடன், திருவெம்பாவை பாடி, முக்கிய வீதிகளில் சென்றனர்.