பழநி முருகன் கோயிலில் ஆணையர் ஆய்வு
ADDED :2864 days ago
பழநி : பழநி முருகன்கோயிலில் தைப்பூசவிழா ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா பழநி வந்தார். பாதயாத்திரை பக்தர்களுக்கான ஆயக்குடி,, இடும்பன்குளம், சண்முகநதி ஆகியபகுதிகளில் மண்டபம், குடிநீர், குளியல், கழிப்பறை வசதிகள் ஆய்வு செய்தார். மலைக்கோயில் இரண்டாவது ரோப்கார் பணி, அன்னதானக்கூடம், கோயில் தங்கும்விடுதிகளில் பக்தர்களுக்கான செய்துள்ள வசதிகள் குறித்து விசாரித்தார். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.