வரதராஜ பெருமாள் கோவிலில் ஜெயேந்திரர், சுவாமி தரிசனம்
ADDED :2841 days ago
காஞ்சிபுரம்;காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜெயேந்திரர், 14 ஆண்டுகளுக்குப் பின் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார்.ஜெயேந்திரரை கோயில் மேலாளர் கண்ணன் வரவேற்றார். ஜெயேந்திரருக்கு, ராஜ்ய சன்யாசிகளுக்கு வழங்கப்படும், பஞ்ச முத்திரை மரியாதை அளிக்கப்பட்டது. பின், கோயிலின் ராஜகோபுரத்தின் அருகில் பூரணக்கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற ஜெயேந்திரர் வரதராஜ பெருமாளைத் தரிசனம் செய்தார்.அவரை மடத்தின் ஊழியர்கள் பல்லக்கில் வைத்து, துாக்கிச் சென்றனர். அனைத்து சன்னிதிகளுக்கும் பல்லக்கிலேயே அழைத்துச் செல்லப்பட்டார்.