உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் படியருளிய லீலை புஷ்ப சப்பரத்தில் சுவாமி பவனி

பரமக்குடியில் படியருளிய லீலை புஷ்ப சப்பரத்தில் சுவாமி பவனி

பரமக்குடி, பரமக்குடியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பைரவ அஷ்டமி எனப்படும் இறைவன் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியருளிய வைபவம் நடந்தது. பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணி முதல் சிறப்பு ேஹாமங்கள், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு பல்வேறு அபிேஷகம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்று காலை 10:00 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடனும், விசாலாட்சி தனித்தேரிலும் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை முன் செல்ல பஞ்சமூர்த்திகள் வீதிவலம் வந்தனர்.

*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அதிகாலை அபிேஷகங்கள் நிறைவடைந்து, சுவாமி, அம்பாள் தனித்தனியாக ரிஷப வாகனத்தில் புஷ்ப சப்பரத்தில் வீதிவலம் வந்தனர். பக்தர்கள் ஹர, ஹர, சிவ, சிவ கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது சுவாமி சென்ற தெருக்களில் சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் படியருளிய லீலையை நினைவூட்டும் விதமாக பலரும் பிரசாதங்கள் வழங்கினர். *எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடத்தப்பட்டன. நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் அபிேஷகத்திற்குப் பின்னர் சுவாமி, அம்பாள் வீதிவலம் வந்தனர்.

*ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, பக்தருக்கு படியளத்தல் நிகழ்ச்சி நடந்தது. தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன், பிரியா விடை அம்மனுடன் எழுந்தளி பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்பட்டது. ராமேஸ்வரம் புதுத்தெரு, நகை கடை தெரு, வர்த்தகன் தெரு, திட்டகுடி வழியாக சுவாமி, அம்மன் வீதி உலா வந்ததும், வீதியெங்கும்கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள், அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாமி, அம்மன் படியளத்தல் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !