இறை நாமம் உதவும்!
ADDED :2867 days ago
முட்செடிகளைத் தின்பதில் ஒட்டகத்துக்கு அவ்வளவு ஆனந்தம்! முள் குத்தி வாயிலிருந்து ரத்தம் வழிந்தாலும், அந்த ரத்தச் சுவை அந்த முள்ளிலிருந்துதான் வருகிறது என்று எண்ணிக்கொள்ளுமாம் ஒட்டகம். அதுபோல் உலகில் மனிதன் எவ்வளவோ துயரங்களை அனுபவித்தாலும் அவற்றை மறந்துவிட்டு, மீண்டும் பழைய போக்கிலேயே வாழத் தலைப்படுகிறான். இதுதான் மாயை! இதுவே அவனை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறது. மாயையை அழிக்கவேண்டும். அதற்கு பகவானின் திருநாமமே உதவி செய்யும்.