ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2866 days ago
புதுச்சேரி அருகேயுள்ள நல்லாத்தூர் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதே நாளில் விசேஷமான வழிபாடு ஒன்றும் இங்கே நடத்தப்படுகிறது. திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும், முகூர்த்த மாலை என்ற பெயரில் நடக்கும் அந்த வழிபாட்டில் திருமணம் தடைப்படுவோர் கலந்து கொள்கின்றனர். அவரவர் வாங்கிவரும் மாலையினை பெருமாளுக்கு சாத்தி முகூர்த்த மாலையாக தரப்படுகிறது. ஆண்டாளின் திருக்கல்யாணம் நடந்த நாளில் நடக்கும் இந்த ஆராதனையில் கலந்துகொண்டால், தடைகள் யாவும் நீங்கி சீக்கிரமே திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.