சாந்தமலையில் மகர ஜோதி தரிசனம்
ADDED :2929 days ago
ஆர்.கே.பேட்டை : பொங்கல் பண்டிகை அன்று சாந்தமலையில் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. அதை தொடர்ந்து, காணும் பொங்கல் அன்று, ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தின் வடக்கே அமைந்துள்ளது சாந்தமலை அய்யப்ப சுவாமி கோவில். பொங்கல் திருநாளான்று மகர சங்கராந்தியை ஒட்டி, சாந்த மலை அய்யப்ப சுவாமி கோவில் மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அன்று, மாலை, 5:00 மணிக்கு மூலவர் அய்யப்ப சுவாமிக்கு, நெய் அபிஷேகம் நடை பெற உள்ளது. அதை தொடர்ந்து. 6:00 மணிக்கு, மலை உச்சயில், மகர ஜோதி தரிசனம் காண கிடைக்கும். மறுநாள் மாட்டு பொங்கல் அன்று சிறப்பு அபிஷேகமும், காணும் பொங்கல் அன்று, காலை 10:00 மணிக்கு, அடிவாரத்தில் உள்ள வாரியார் சுவாமிகள் ஆசிரமம் மகா மண்டபத்தில், ஊஞ்சல் சேவை நடக்கிறது.