வீரராகவப்பெருமாள் கோவிலில் கூடாரை வெல்லும் சீர் உற்சவ விழா
ADDED :2847 days ago
திருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள் நடந்து வந்தன. ஆண்டாள் விரதம் இருந்து, பெருமாளை அடைந்த, கூடாரை வெல்லும் சீர் உற்சவம் நேற்று நடந்தது.ஆண்டாள், தவமிருந்து எம்பெருமாளை அடைந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில், திருப்பாவை பாசுரங்கள் பாடி, சிறப்பு பூஜைகள் நடந்தன.மாலை, வேத மந்திரங்கள் முழங்க, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவிநாசியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கூடாரை வெல்லும் சீர் உற்சவம் நடந்தது.துளசி மாடத்தின் கீழ் எழுந்தருளிய ஆண்டாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், கொடுவாய் விண்ணளந்த பெருமாள் கோவில் உள்பட, பெருமாள் @காவில்களில், கூடாரை வெல்லும் சீர் விழா நடந்தது.