மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2793 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2793 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2793 days ago
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_75752_125814535.jpgஅழகிரிநாதர் - ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம்,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_75752_125824279.jpgஅழகிரிநாதர் - ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம்சேலம்: சேலம், கோட்டையில் உள்ள அழகிரிநாத சுவாமி கோவிலில் நேற்று நடந்த கூடாரவல்லி உற்சவத்தில், ராஜகிரீட அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.உத்தமசோழபுரம்: அழகிரிநாதர், ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. கூடாரவல்லி திருவிழாவை யொட்டி, சேலம், உத்தம சோழபுரம் அழகிரிநாதர் கோவிலில், நேற்று காலை, அழகிரிநாதர், ஆண்டாள் நாச்சியாருக்கு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, அவர்களது வலது கரத்தில் கங்கணம் கட்டி, கல்யாண உற்சவம் தொடங்கியது. திருமாங்கல்யத்துக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. அழகிரிநாதர், ஆண்டாளுக்கு புதிய வஸ்திரம் சார்த்தி, பட்டாச்சாரியார் சூடிக்கொடுத்த சுடர் கொடியால், அழகிரிநாதர் கரத்தில் வைக்கப்பட்டிருந்த திருமாங்கல்யத்தை, ஆண்டாள் கழுத்தில் அணிவித்தார். ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.* சேவா சங்கம் மற்றும் ஸ்ரீபுஷ்கலாதேவி மகளிர் அமைப்பு சார்பில், உலக நன்மை வேண்டி, சேலம், பட்டைக்கோவில் பெருமாள் கோவில், வசந்த மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், 200க்கும் மேற்பட்ட பெண்கள், வழிபாடு நடத்தினர். ராஜகிரீட அலங்காரம்: சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில், நேற்று, கூடாரவல்லி உற்சவம் நடந்தது. அதையொட்டி, அதிகாலை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை செய்து, ராஜகிரீட அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். ஆஞ்சநேயரும், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2793 days ago
2793 days ago
2793 days ago