மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2793 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2793 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2793 days ago
மதுரை, அடக்கம், ஞானம், பக்தியே உண்மையான செல்வம்,”, என மதுரையில் சின்மயா மிஷன் தலைவர் சிவயோகானந்தா பேசினார்.மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் தமிழ் இசை சங்கம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நெஞ்சுக்கோர் உபதேசம்’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:நிழல் போன்று நம்மை தொடர்ந்து வரும் இறைவனிடத்தில் நீங்காத பக்தியோடும் உள் அன்போடும் உறுக வேண்டும். உள்ளன்போடு இறைவனை நம்பினால், எதற்கும் கவலை இல்லை. தாய், தந்தை, தோழனாக தெய்வம் உண்டு. நம் எல்லோருக்கும் முன் செல்லும் கடவுள் தன்னை முன்னிறுத்துவது இல்லை. எந்த பிரதிபலனுமின்றி செய்யும் உபகாரமே உபதேசமாகும். அடக்கம், பணிவு, பக்தி, ஞானத்தோடு கூடிய செல்வமே உண்மையான செல்வம். மற்ற செல்வங்கள் நமக்கு துன்பத்தையே தரும். செல்வத்தை மட்டும் வைத்தே இறைவனை அடைய முடியாது. இல்லத்தாருக்கு ஐந்து கடமைகள் உண்டு. முன்னோர்களை நீராலும், தேவர்களை அக்னியாலும், விருந்தினரை அன்னத்தாலும், நம்மை சார்ந்தோரை பொருளாலும், தன்னை ஞானத்தால் திருப்தி செய்ய வேண்டும், என்றார்.
2793 days ago
2793 days ago
2793 days ago