பகவந்த சுவாமிகள் திருவுருவப்படம் வீதியுலா!
ADDED :5044 days ago
கடலூர் : கடலூர் புதுப்பாளையத்தில் பகவந்த சுவாமிகள் திருவுருவப்படம் வீதியுலா நடந்தது. கடலூர், புதுப்பாளையம் பகவந்த சுவாமிகள் மடாலயத்தில் 122வது ஆண்டு குருபூஜை விழா நேற்று முன்தினம் சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ ஆராதனையுடன் துவங்கியது. அதனையொட்டி பகவந்த சுவாமிகள் திருவுருவப் படம் வீதியுலா நடந்தது. நேற்று காலை மகா அபிஷேகம், 12 மணிக்கு மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை தேவார இசை நிகழ்ச்சி நடந்தது.